மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு
Share
மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என நோபல் குழு அறிவித்துள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன. உலகின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன.
இதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வேயில் அறிவிக்கப்படுகிறது.
அவ்வகையில் 2020ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. முதல் நாள் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டன் விஞ் ஞானி மைக்கேல் ஹாட்டன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெபடைடிஸ் சி வைரஸை அடையாளம் காண இவர்களின் ஆய்வு வழிவகுத்துள்ளது.
ஹெபடைடிஸ் சி வைரஸ் மட்டுமே ஹெபடைடிசை ஏற்படுத்தும் என்ற ஆய்வுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.