Type to search

Headlines

மாடுகள் வெட்ட இலங்கையில் தடை

Share

இலங்கையில் மாடுகளை வெட்ட தடை விதிக்கும் தீர் மானத்துக்கு பெரமுனவின் பாராளுமன்றக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்­வினால் முன்மொழியப்பட்ட குறித்த திட்டத்துக்கு பெரமுன வினர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

மாட்டிறைச்சி தேவை ஏற்படின் வெளிநாட்டில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய் வது குறித்த வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இறைச்சிக்காக மாடுகளை அறுத்தல், ஒரு தேசிய பிரச்சினையாக உருவெடுத் திருக்கின்றது.

இலங்கையில் மாடு அறுப்பதையும் மாட்டிறைச்சிக் கடைகளையும் தடை செய்ய வேண்டும் என்று 2014 பெப்ரவரி மாதத்தில், பொதுபல சேனா அமைப்பு பாரிய எதிர்ப்புப் பிரசாரம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

பின்னர் நல்லாட்சி அரசில், வெளிநாட்டில் இருந்து இறைச்சியை இறக்குமதி செய்வதின் ஊடாக நாட்டில் மாடறுப்பை தடை செய்வதற்குரிய செயல் திட்டத்தை முன்னெடுக்கும்படி நிதி அமைச்சருக்கு தான் பணித்திருப்பதாக ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன கடந்த 2016ஆம் ஆண்டு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link