Type to search

Headlines

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பலருக்கு திடீர் இடமாற்றம்

Share

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பலரிற்கு நேற்று முன்தினம் முதல் அதிரடி மாற்றங்கள் வடக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட இட மாற்றங்களில் தற்போதைய ஆளுநர் செயலக செயலாளர் எஸ்.சத்தியசீலன் கொழும்பு அமைச்சிற்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அவரது இடத்திற்கு தற்போதைய உள்ராட்சி அமைச்சின் செயலாளரான திருமதி சரஸ்வதி மேகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஏற்படும் உள்ராட்சி அமைச்சின் செயலாளர் வெற்றிடத்திற்கு தற்போதைய மகளிர் விவகார அமைச்சின் செயலாளரான வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் விவகார அமைச்சின் செயலாளராக தற்போதைய பேரவைச் செயலக செய லாளரான ரூபினி வரதலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதோடு பேரவைச் செயலகத்திற்கும் அவர் பதில் கடமையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link