7 1/2 பவுண் நகை தொல்புரத்தில் திருட்டு
Share
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை 7½ பவுண் நகை களவாடப்பட்டுள்ளது.
கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றபோதே இத் திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றுக் காலை நகைகளை வைத்த இடத்தில் பார்த்தபோது அவை திருடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.