Type to search

Headlines

ஜனாதிபதியின் ஒரே நாடு, ஒரே சட்டம் இலங்கையில் சாத்தியப்படாது

Share

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் பிரச்சினை களுக்கு எந்தத் தீர்வுகளும் இல்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லமன் கிரியெல்ல, ஜனாதிபதி கூறும் ஒரே சட்டம், ஒரே நாடு சாத்தியப்ப டாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 2015இல் கையுயர்த்திய தற் போதைய ஆளுங்கட்சியினர், ஏன் இப்போது 19ஐ நீக்க அவசரப்படுகிறார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “கடந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு எமக்கு மக்கள் ஆணை கிடைத்தது.

இதுதொடர்பில் சட்ட ஆலோசனை யைப் பெற்றுக்கொண்டபோது, இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டு மென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

“எனினும் ஜனாதிபதித் தேர்தல் அதன் பின்னரான பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றதால் அப்போது சர்வஜன வாக்கெடுப்பை எம்மால் நடத்த முடியாமல் போனது.

“ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் ஒரே சட்டம், ஒரே நாடு எனக் கூறியிருந்தார். இது சாத்தியப்படாத ஒன்று இதனைக் கொண்டுவருவது கடினமானது என்றார்.

“இலங்கையில் குற்றவியல் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, ஆனால் கண்டிய சட்டம், தேசவழமைச் சட்டம் என தனிப்பட்ட சட்டங்களும் நாட்டில் இருக்கின்றன.

இவற்றை எல்லாம் நீக்கப் போகிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link