Type to search

Headlines

வீட்டு மலசல கூடக் குழிக்குள் பிறந்த சிசுவைப் போட்ட தாய்

Share

பிறந்த சிசுவை வீட்டு மலசல கூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று புத்தூர் கிழக்கில் இடம்பெற்றது.

நான்கு நாட்களுக்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது. சிசுவை வீட்டில்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார்.

நான்கு நாட்கள் ஆகிய நிலையில் சிசுவின் உடல் அழுகி, அயலில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு துர்நாற்றத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பில், அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதுடன், தாயாரையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link