தீக்காயத்துக்குள்ளான வயோதிப மாது உயிரிழப்பு
Share
தீக்காயத்துக்குள்ளான வயோதிப மாது ஒருவர் உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் குண்டுவர்காடு ஒழுங்கை, மதவடி, வல்வெட்டித் துறையில் 65 வயதுடைய தவராசா இராஜேஸ்வரி என்பவரே உயிரிழந்தவராவார்.
தீக்காயத்துக்குள்ளான அவரை அவசர அம்புலன்ஸ் வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அவர் மரணம் அடைந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பருத்தித்துறை மரண விசா ரணை அதிகாரி சதானந்தன் சிவராசா உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.