Type to search

Headlines

தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பு முக்கிய மானது

Share

கொரோனா வைரஸ் பரவியுள்ள பின்னணியில் பொதுத் தேர்தலைவிட பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் உள்ள மிகவும் பழமையான கட்சி. ஐக்கிய தேசியக் கட்சி எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயார். எப்படியான சவால்கள் வந்தாலும் கட்சி இம் முறை 22 மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூற முடியும்.

எனினும் தற்போது தேர்தலை விட மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. முதலில் அதில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

தேர்தலை அடிப்படையாகக் கொண்டு மக்களை பலி கொடுக்க முடியாது.

தேர்தல் அவசியம் என்ற போதிலும் மக்களை பாதுகாப்பது அதனைவிட முக்கியமானது.

இதில் உள்ள உண்மை நிலைமை என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link