காணாமல்போன மாணவன் 6 நாட்களின் பின்னர் கடல்நீரேரியில் சடலமாக மீட்பு
Share
பளை, தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது மாணவன்காணாமற் போயிருந்த நிலையில் 6 நாட்களின் பின்னர் புலோப்பளை கடல்நீரேரியில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பளை, முள்ளியடியைச் சேர்ந்த ஆர். அனோச் (வயது – 17) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புலோப்பளை கடல்நீரேரியில் நேற்று பிற்பகல் அவரது சடலம் கண்டறியப்பட்டது.
பளை தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் பயின்று 2019ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை எழுதி முடிவுக்காக காத்திருந்தவர்.
இந்த நிலையில் மாணவனைக் காணவில்லை என்று கடந்த 28ஆம் திகதி பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் பட்டிருந்தது. அவர் 6 நாட்களின் பின்னர் கடல்நீரேரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.