Type to search

Headlines

தனியார் கல்வி நிலையங்கள், தியேட்டர்கள் திறக்க அனுமதியில்லை

Share

கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கி விடவில்லை.

எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காக சென்று வருவதை தவிர வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய கல்வி நிறு வனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப் பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்றன மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப் பட்டுள்ளன.

மக்கள் ஒன்றுகூடுவது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தடை என்பதால் சமய விழாக்களையும் இடைநிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழமையான ஒழுங்கில் செயற்படும்.

கொழும்பு மாவட்டத்தின் உள்ளே அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமுகமளிக்க வேண்டும்.

ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்கள் வீட்டிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனத்திலும் கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் யார் கடமைக்கு சமுக மளிக்க வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும்.

ஒரு நாளில் பணிக்கு சமுகமளிக்கும் முன்றில் ஒரு பகுதியினர் மற்றும் 50 வீத மானவர்களுக்கு பதிலாக அடுத்த நாளில் வேறு பிரிவினரை நிறுவனத் தலைவர்கள் தெரிவு செய்யலாம்.

அலுவலகங்களை திறந்து நடத்திச் செல்லுகின்றபோது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தேவையான வசதிகளை வழங்குவது நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும்.

தனியார் துறை நிறுவனங்களை காலை 10.00 மணிக்கு திறக்குமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய எண்ணிக்கை மற்றும் யார் சமுகமளிக் வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

இந்நிறுவனங்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

மீண்டும் திறக்கப்படும் அலுவலகங்களில் ஊழியர்களின் போக்குவரத்து வசதிகளை வழங்க போக்குவரத்துச் சபை மற்றும் புகையிரத சேவை ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களில் கடமைக்கு சமுகமளிக்கும் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பினும் அரச போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் அனைத்து ஊழியர்களும் கடமைக்கு சமுகமளிப்பது கட்டாயமானதாகும்.

பேருந்துகள், வான் அல்லது தொடருந்துகளில் பயணம்செய்யும் பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசி அளவு மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.

அனைத்து வாகனங்களும் கிருமி தொற்றுநீக்கத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகளின் கீழ் தமது பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசு தனியார் துறை போக்குவரத்து நிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதற்கு மத்தியில் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப் படுத் தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மக்களின் இந்த பயங்கரமான நோய்த்தொற்றிலிருந்து விடுவிக்கும் நோக்குடனேயே செயற்படுத்தப்படுகின்றது. பின்பற்றிய கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக கிடைத்த முன்னேற்ற நிலைமைகள் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு உதவியது.

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப் புதல் மற்றும் பிரச்சினையால் பெரிதும் பாதிக் கப்பட்ட வறிய மற்றும் இடர் நிலைக்குள் ளான மக்கள் பிரிவினரின் வாழ்க்கையை பாதுகாப்பது மற்றுமொரு நோக்கமாகும்.

எனினும் கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை.

எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காக சென்றுவருவதை தவிர வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியவுடன் தேவையற்ற பதற்றத்துடன் பெருமளவில் ஒன்றுகூடும் வகையில் வர்த்தக நிலையங்களில் ஒன்றுகூட வேண்டாம் என்றும் மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்சினையை முழுமையாக ஒழித்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடும் வரை தம்முடையதும் பிள்ளைகளுடையதும், தேசத்தினதும் பாதுகாப்பு மற் றும் முன்னேற்றத்திற்காக அனைத்து சிரமங்களையும் பொறுப்புடன் சகித்துக் கொள்ளுமாறு அரசு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link