பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் அடுத்த இரு வாரத்தில் ஊரடங்கை தளர்த்த முடியும்
Share
இறுக்கமான சுகாதார மற்றும் சட்ட கட்டமைப்பில் தொடர்ந்தும் செயற்பட்டால் “கோவிட்-19″ கொரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலை கட்டுப்படுத்த மேலும் இருவாரகாலம் போது மானதாக இருக்கும்.
ஏப்ரல் மாத இறுதியுடன் நாட்டில் பல மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் “கோவிட்-19″ கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறான நிலைமைகள் முன்னெடுக்கப்படும் என்பதற்கு பதில் தெரிவித்த சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,
தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் தவிர்ந்து ஏனையவர்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படாத வண்ணமே உள்ளதாக வைத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் மக்களை பாதுகாக்க எடுத்த வேலைத்திட்டத்தின் பிரதிபலன் என்றே கூற வேண்டும்.
எவ்வாறு இருப்பினும் இப்போது நாம் முன்னெடுத்து வருகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு நாம் முன்னெடுத்தால் மட்டுமே எம்மால் வெகு சீக்கிரமாக இந்த நிலை மைகளில் இருந்து விடுபட முடியும்.
எவ்வாறு இருப்பினும் இந்த மாத இறுதிக்குள் வெளி மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என்ற நிலைப்பாடும் உள்ளது.
ஆகவே அடுத்த இரண்டு வார காலம் மக்கள் எமக்கு முழுமையான ஒத்துழைப்புக் களை வழங்கி சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது கட்டாய மாகும் என்றார்.