Type to search

Editorial

வீட்டுத்தோட்டம் செய்கின்ற முயற்சியில் ஈடுபடுவோம்

Share

தமிழ் – சிங்கள புத்தாண்டு பிறந்துள்ளது.

புதிய புத்தாண்டில் நடப்பவை அனைத்தும் நல்லதாக நடக்க இறைவனைப் பிரார்த்திப்போமாக.

எங்கள் பிரார்த்தனை, உலகத்தை உலுக்கி நிற்கின்ற கொரோனாத் தொற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்காகவும் அமையட்டும்.

கொரோனாத் தொற்றுக் காரணமாக உலகில் ஏற்பட்டிருக்கின்ற துன்பம் ஒருபுறமிருக்க, அந்த நோயின் கொடூரம் முற்றுப் பெறாவிட்டால், உலகப் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

இப்போது நம் நாட்டில் மக்கள் வெளியில் நடமாடமுடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறதே யன்றி, பொருட்தட்டுப்பாடு நிலைமை இன்னமும் ஏற்படவில்லை.

தவிர, ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற மனநிலை கொண்ட தனிநபர்களின் பரோபகாரத்தில் நிவாரணப் பொருட்களும் ஓரளவுக்குக் கிடைக்கப் பெறுகிறது.

இதற்கு மேலாக அரசாங்கத்தின் சமுர்த்திக் கொடுப்பனவுகளும் முதியவர்களுக்கான உத விக் கொடுப்பனவுகளும் நிலைமையை ஓரளவுக்குச் சமாளிக்கின்றது என்ற வகையில் ஆறுதல் அடைய முடியும்.

ஆனால் கொரோனாத் தொற்று முற்றுப் பெறாமல் நிலைமை நீண்டு செல்லுமாக இருந் தால், பொருட்தட்டுப்பாடுகளும் விலையேற்றங்களும் அதிகரிப்பதுடன் தனிநபர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் உதவித் திட்டங்களும் வலுக்குறையத் தொடங்கிவிடும்.

இத்தகைய நிலைமையானது வறுமை, பஞ்சம், பசி என்ற மிக மோசமான சூழமைக்கு மக்களை இட்டுச் செல்லும்.

எனவே இது விடயத்தில் நாம் ஒவ்வொரு வரும் விழிப்பாகவும் தூர நோக்குடனும் செயற் பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அதிலும் உலக நாடுகளில் கொரோனாத் தொற்று கட்டுக்கடங்காமல் கோரத்தாண்டவம் ஆடுமாக இருந்தால் வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதி என்பது சாத்தியப்படாமல் போகும்.

அத்தகையதொரு நிலைமை ஆபத்தானதாக அமையும் என்பதை நாம் தெரிந்து வைத் திருப்பது கட்டாயமானது.

எனவே கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காலத்தில் வீட்டுத்தோட்டம் செய்கின்ற ஒரு நல்ல கருமத்தை நாம் பழகிக் கொள்வதும் பின்பற்றுவதும் என்றும் எமக்குக் கைகொடுப்பதாகும்.

ஆம், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் வீடுகள் தோறும் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகளை வீட்டு வளவில் நட்டு தண்ணீர் ஊற்றி அதனை பராமரித்து வளர்த்தவர்கள் இப்போது தம் வீட்டுக்குத் தேவையான தேங்காய்களை தங்கள் வளவிலேயே பெற்றுக் கொள்கின்றனர் எனும் போது அதற்குள் இருக்கக் கூடிய திருப்தியும் மகிழ்ச்சியும் வேறு எங்கும் பெற்றுக் கொள்ள முடியாதது.

எனவே உடற்பயிற்சிக்காக விடிகாலைப் பொழுதிலும் மாலை வேளையிலும் வீதியோர மாக வேக நடைபுரிகின்றவர்கள்; விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி செய்கின்ற வர்கள்; அரச பணியாளர்கள்; மாணவர்கள் என ஒட்டுமொத்த மக்களும் தங்களின் உண வுக்குத் தேவையான மரக்கறி வகைகளையும் பழ வகைகளையும் தங்கள் வீட்டு வளவி லேயே உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.

நம் வீட்டு வளவில் காய்த்த கத்தரி, முருங்கை, வெண்டி, பயிற்றை, பச்சை மிளகாய், வல் லாரை இவற்றைச் சமைத்துச் சாப்பிடுகின்ற மனநிலை நூறு ஆண்டுகள் நோயற்ற ஆயுள் என்ற மிக உன்னதமான வாழ்வைத் தரும் என்பது சர்வ நிச்சயம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link