கிளிநொச்சியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
Share
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் நீர்ப்பாசன கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியூடாக செல்லும் அக்கராயன்குளம் நீர்ப்பாசன கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக அக்கராயன் குளம் பொலிசார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் ஆகியோருக்கு கிடைத்த தகவலை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் ஒரு பிள்ளையின் தந்தையான மார்க்கண்டு ஜெகதீஸ்வரன் (வயது – 45) என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து சென்ற தாகவும் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனவும் அவரது மனைவி தெரி வித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்குட்படுத்தி சடலத்தை உறவினர்களிடம் கையளிக்கு மாறும் கட்டளையிட்டுள்ளார்.