Type to search

Local News

அத்தியாவசிய பொருட்களுக்கான பாஸ் அனுமதி பெற்று சீமெந்து கொண்டு சென்றவர் வவுனியாவில் பொலிஸாரால் கைது

Share

அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக அனுமதியைப் பெற்ற ஒருவர் சீமெந்து கொண்டு சென்ற நிலையில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளதுடன் பார ஊர்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இருந்து கிளிநொச்சிக்கு கோதுமை மாவினை கொண்டு செல்வதற்கு என அனுமதியை பெற்று பார ஊர்தியில் 400 பைக்கற் சீமெந்தினை கொண்டு சென்றமை வவுனியாவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை யில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு பார ஊர்தியையும், சாரதியையும் கொண்டு சென்ற பொலிஸார் சாரதியை கைது செய்ததுடன் பார ஊர்தியை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link