Type to search

World News

புலிக்கு கொரோனா

Share

அமெரிக்காவின் நியூயோர்க் சிட்டியிலுள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.

வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் நேற்றுக் காலை நிலவரப்படி சுமார் 3 இலட்சத்து 36 ஆயிரத்து 673 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில் மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

ஆனால், இந்தக் கூற்றைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயோர்க் சிட்டியில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி யானது. எனவே, அந்த நபர் மூலமாக புலிக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும் சில புலிகளுக்கு வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.

புலிகள் மற்றும் சிங்கங்களிடம் வைரஸ் தொற்று எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. எனி னும் பூங்காவிலுள்ள அனைத்து விலங்குகளையும் உன்னிப் பாகக் கண்காணித்து வருகிறோம் என்று பூங்கா நிர்வாகம் மேலும் தெரிவித்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link