Type to search

Local News

வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாகப் பிரகடனம்

Share

இன்று ஏப்ரல் 6ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 10ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னர் மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரையும் மார்ச் 30ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3ஆம் திகதிவரையும் அரச மற்றும் தனியார் துறையினர் வீட்டி லிருந்து பணியாற்றும் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த வாரமும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link