கொரோனாவின் கோரத்தாண்டவம் அடுத்த வாரம் மேலும் மோசமடையலாம்
Share
இலங்கையில் கொரோனாவின் தாக்கம் அடுத்த வாரம் இன்னும் மோசமான நிலையை அடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவலின் மூன்றாம் கட்டமாக தற்போது குழுக்களாக பரவி வருவதாகவும் வைரஸின் நான்காவது கட்டம் பரவினால் அது மிக ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தும் என சங்கத் தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்றுமுன்தினம் முதலாவது மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.