யாழில் மறுஅறிவித்தல்வரை ஊரடங்கு தொடர்ந்து நீடிப்பு
Share
யாழில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
அவ்வறிக்கையிலேயே மேற் படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று திங்கள் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் இன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக் கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை வினைத் திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோ கம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடை முறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அகுரணை கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத் தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள் ளன. எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ முழு மையாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.