13வது முறையாக சம்பியன் பட்டம் வென்றார் கிளே ஒஃப் த கிங்
Share
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ‘கிளே ஒஃப் த கிங்’ என வர்ணிக்கப்படும் ஸ்பெயினின் ரபேல் நடால் 13ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடாலும், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோ விச்சும் மோதினர்.
விறுவிறுப்பான இப்போட்டியில், முதல் செட்டை நடால் 6-0 என எளிதாக கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் நிதான ஆட்டத்தை வெளிப் படுத்திய நடால், 6-2 என செட்டை இலகுவாக வென்றார்.
முதலிரண்டு செட்டுகளையும் எளிதாக வென்ற நடாலுக்கு மூன்றாவது செட்டில் சவால் காத்திருந்தது.
மூன்றாவது செட்டில் நடாலுக்கு ஜோகோவிச் கடும் நெருக்கடி கொடுத்தார். எனினும் அதனை திறம்பட சமாளித்த நடால், செட்டை 7-5 என போராடிக் கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தை வென்றார்.
நடாலுக்கு இது 13 ஆவது பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டமாகும். முன்னதாக 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் அவர் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
அத்துடன் ஆண்கள் டென்னிஸ் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் சம்பி யன் பட்டங்களை வென்ற மகத்தான சாதனை நாயகன் ரோஜர் பெடரரின் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என்ற சாத னையையும் நடால் சமன் செய்துள்ளார்.
இதுதவிர ஒரு கிராண்ட்ஸ்லாம் தொடரில் அதிக சம்பியன் பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையும் நடா லையே சேரும்.
உலகின் முதல்நிலை வீரரான செர் பியாவின் நோவக் ஜோகோவிச், இது வரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள போதும் இதுவரை 2016 ஆம் ஆண்டு மட்டுமே, ஒரேயொரு முறை அவர் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென் றுள்ளார்.