Type to search

Editorial

மகா சங்கம் அரசாங்கத்துக்கு சங்கடத்தைக் கொடுக்கும்

Share

கர்ணனே தனது மிகப்பெரிய பலம் எனத் துரியோதனன் நினைத்திருந்தான்.

கர்ணனிடம் இருக்கக்கூடிய நாகாஸ்திரம் அவ்வாறானதொரு நம்பிக்கையை துரி யோதனனுக்குக் கொடுத்திருக்கலாம்.

எனினும் யார் தன்னுடைய பலம் என்று துரியோதனன் நம்பினானோ அவன் சாபம் பெற்றவனானான்.

ஆம், உற்றபோது கற்றது மறப்பாய் எனப் பரசுராமர் விதித்த சாபம் போர்க்களத்தில் வேலை செய்கிறது.

புதைந்த தேரை மீட்டெடுக்க முடியாமல் கர்ணன் அவஸ்தைப்படுகிறான். அவனின் அறிவாற்றல் மங்கிப் போகிறது.

சாபம் நிறைவேறும் காலம் வந்துற்றது. தர்மம் நிலைநாட்டப்பட வேண்டுமாயின், அதர் மத்தின் பக்கம் நிற்கின்ற தர்மத்தையும் அதர்மமாகக் கருதி அதற்கும் தண்டனை வழங்குவதே அறத்தை நிலைநாட்ட வல்லா னின் கருமமாகும்.

கர்ணன் கொடைவள்ளலாக இருந்தபோதி லும் துரியோதனன் பக்கம் அவன் நின்றத னால் அவனின் கொடை வீணாயிற்று.
போர்க்களத்தில் கர்ணன் வீழ்ந்துற்றபோது, துரியோதனனின் தோல்வி எழுதப்பட்டு விட்டது.

எனினும் அதுபற்றி துரியோதனன் சிந் தித்திலன். ஐந்து வீடும் தரேன் என்ற அவ னின் மமதை அவனையும் அவன் குலத்தை யும் பரிநாசம் செய்தது.

இஃது மகாபாரத இதிகாசம் போதிக்கும் தத்துவம். நான் மட்டும் வாழ வேண்டும்; என் இனம்; என் மதம்; என் மொழி இவற்றுக்கே முதலிடம். மற்றவையயல்லாம் இரண்டாம் நிலை என்று யார் நினைத்தாலும் அஃது கெளரவர் சேனைக்குரிய கர்வமாகவே கரு தப்படும் என்பதோடு, பாரத இதிகாசம் போதிக் கும் தத்துவத்தின் ஒரு சிறு பகுதியை நிறை வுக்குக் கொண்டு வரலாம்.

எனினும் இஃது எதற்கானதென்று நீங் கள் கேட்டால்; 20ஆவது திருத்தச் சட்ட மூலத் தோடு இலங்கை படும்பாட்டை நினைத்த போது மேற்போந்த தத்துவம் நினைவுக்கு வந்ததால் அதனைச் செப்பினோம்.

இவை ஒருபுறமிருக்க, 20ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்க்க வேண்டும். அதனை நிறைவேறாமல் தடுக்க வேண்டும் என பெளத்த மகா சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது.
20ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப் பட்டால் அது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகி விடும். சர்வாதிகாரம் தலைதூக்கும் என பெளத்த மகா சங்கம் கூறுகிறதெனில், இருப தாவது சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் ஆளுந்தரப்பு மிகப்பெரும் சவால்களை எதிர் கொள்ளும் என்பது நிறுதிட்டமாகிறது.

அதாவது யார் இந்த நாட்டை ஆள வேண் டும் எனத் தீர்மானிக்கின்ற சக்தியாக இருக் கக்கூடிய பெளத்த மகா சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்டால், அதனைத் தாண்டிச் செல்வதென்பது இயலாத காரியமே.

அவ்வாறு தாண்ட நினைத்தால் அதுவே விழுக்காட்டின் அடித்தளமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link