ஐ.பி.எல். நடக்கவில்லை என்றால்? டோனிக்கு இடம் கிடைக்குமா? முன்னாள் வீரர் சோப்ரா விளக்கம்
Share
கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், டோனியின் எதிர்காலம் என்ன ஆகும்? அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருவதால், இந்த மாத இறுதியில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் டோனியின் ஆட்டத்தை பார்த்து தான், அவர் வரவிருக்கும் இருபது- 20 உலகக்கோப்பை தொடரில் தெரிவு செய்யப்படுவார் என்றெல்லாம் செய்தி வெளியா கியது. ஆனால் தற்போது ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பதாக அறி விக்கப்பட்டாலும், கொரோனா வின் பாதிப்பும் மிகவும் தீவிர மடைந்தால், இது இரத்தாவதற்கு கூட வாய்ப்புள்ளது.
இதனால் டோனியும் விளை யாட முடியாமல் போகலாம் என்ப தால், அப்படி அவர் விளையாடா மல் போனால், வரவிருக்கும் இருபது-20 உலகக்கோப்பை தொடரில் டோனிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் பலரும் எழுப்பியுள்ளனர்.
இது குறித்து இந்திய அணி யின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், டோனி யைப் போன்ற ஒரு வீரருக்கு ஐபிஎல் ஒருபோதும் அளவு கோலாக இருக்காது.
மேலும் ஐபிஎல் தொடரில் டோனி சிறப்பாக ஆடும் பட்சத்தில் இந்திய அணிக்கு தெரிவு செய் வார் என்று நிபுணர்கள் சொல் கிறார்கள்.
ஆனால் அவரை இதை செய் யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று யாரும் சொல்லமுடியாது. டோனி என்ன செய்கிறார் என்பது அவருக்கு தெரியும். அவர் அணி க்கு திரும்பும் வேண்டுமா? வேண் டாமா? என்பது அவருடைய தனிப்பட்ட விடயம்.
அது அவருக்கு நிச்சயம் தெரி யும்.ஐபிஎல் தொடர் டோனியின் தேர்வில் ஒரு முக்கிய காரணி யாக அமையாது. ஏனெனில் அவர் மீண்டும் அணிக்கு திரு ம்ப வேண்டும் என்று நினைத் தால் தேர்வு குழுவினரை அவர் அணுகினால் போதும் அவர் களை அவரை தேர்வு செய்து விடுவார்கள்.
மேலும் அவருடைய அனு பவம் சுப்பர் மார்க்கெட்டில் வாங் குவது கிடையாது. டோனி ஒரு மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த வீரர். அவர் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை. ஐபிஎல் தொட ரில் விளையாடினாலும், விளை யாடாவிட்டாலும் அவர் இருபது-20 உலக கோப்பை அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.
ஆனால், புதிய தேர்வுக்குழு என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே டோனி யின் தெரிவு அமையும் என்று கூறியுள்ளார்.