இளைஞரிடம் கை கூப்பி கெஞ்சிய பொலிஸார்
Share
நம் நாட்டுக்காக, குடும்பத்துக் காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ள வேளையில் வெளி யில் வருவதைத் தவிருங்கள் என்று வாகனச் சாரதிகளிடம் பொலி ஸார் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறி வித்துள்ளார்.
அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமுலானது.
தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து விட வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள்- அறிவுறுத் தல்கள் வெளியிடப்பட்டன.
எவ்வளவு அறிவுரைகள் – அறி வுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந் தாலும், வீதிகளில் சில வாகனச் சாரதிகள் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் பயணித்த வாகனச் சாரதிகளிடம் போக்கு வரத்து பொலிஸ்; உத்தியோகத்தர் ரஷீத், தன்னுடைய இருகரங் களையும் கூப்பி, ஊரடங்கில் வெளியில் வருவதைத் தவிருங் கள் என்று கெஞ்சினார்.
மேலும் அவர் வாகனச் சாரதி களிடம், ‘வீட்டில் இருங்கள் என்று தான் அரசு சொல்கிறது. நம் நாட் டுக்காக, குடும்பத்துக்காக வெளி யில் வராதீர்கள்.
உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கின்றோம்’ என்று கூறினார்.
அவரின் இந்த வேண்டு கோளை சில வாகனச் சாரதிகள் கேட்டு, இனிமேல் இப்படி வரமாட் டோம். என்று கூறிவிட்டு சென்ற னர்.
அதில் ஒருவர் பொலிஸ் உத்தி யோகத்தரின் வேண்டுகோளைப் பாராட்டி, நெகிழ்ச்சியில் அவர் காலிலும் விழுந்தார்.
அதேபோன்று, சென்னை திருமங்கலம் நெடுஞ்சாலையில் தடுப்பு வேலி அமைத்து, போக்கு வரத்து பொலிஸ் உத்தியோகத்தர் இளங்கோவன், வாகனச்; சாரதி களிடம் தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கை கூப்பி கெஞ்சினார்.