Type to search

World News

பீகாரில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்குக் கொரோனா

Share

பீகாரில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்குக் கொரோனா தொற்றிருப்பதும் ஓமன் நாட்டிலிருந்து திரும்பிய இளைஞன் மூலம் பரவியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கணிசமாக வாழ்கி றார்கள். சுமார் 60 ஆயிரம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகின்றனர்.

அந்த மாவட்டத்தில் ராகனா த்பூர் அருகே ஒரு சிறுகிராமம் உள்ளது. அங்கு 900 வீடுகள் இருக்கின்றன. சுமார் 5 ஆயி ரம் பேர் குடியிருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள 23 பேருக்குக் கொரோனா தொற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே அது ஒரு ஆபத்தான கிராமமாக அடையாளப்படுத்தப்பட்டது.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன்; கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி ஓமன் நாட்டிலிருந்து திரும்பி வந்தார். குடும்பத்தினருடன் சகஜமாக பழகியதுடன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களிலும் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அந்த இளைஞனுக்குக் கொரோனா தொற்றிருப்பதை உறுதி செய்தனர்.

உடனே அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படடன.
அப்போது அதிர்ச்சி தரும் விதமாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த 28 பேர்களில் பெண் கள், குழந்தைகள் என 22 பேருக்குக் கொரோனா வைரஸ் கொத்தாக பரவியிருப்பது கண்டறியப்பட்டது.

ஓமன் நாட்டிலி ருந்து திரும்பிய அந்த இளைஞன்; மூலம்தான் அது பரவியதை வைத்தியர்கள்; உறுதிசெய்தனர்.

உடனடியாக அந்தக் கிராமம் ‘சீல்’ வைக்கப்பட்டது. அங்கு கிராம மக்களை வீட்டைவிட்டு வெளியே வரவிடாமல் தடுக்க ஆயுதப்படை பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link