Type to search

World News

அமேசன் காட்டில் வாழும் பெண்ணுக்குக் கொரோனா

Share

பிரேசிலிலுள்ள அமேசன் காட்டில் வாழும் பழங்குடி இன பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் பரவியது.

உலகம் முழுவதும் 10 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

பிரேசில் நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. அந்நாட்டில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸால் பாதிப்பு ஏற்பட்டது.

உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசன் காட்டின் பெரும் பகுதி பிரேசிலி ல்தான் உள்ளது. இந்தக் காடுகளில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் வெளி உலகத் தொடர்பு அதிகம் இல்லாமல் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளைத் தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்போது அமேசன் காடுகளில் வாழும் மக்களிடமும் பரவத் தொடங்கியது.

அமேசனின் கொகமா பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அப்பெண் சுகாதாரப் பணியாளராகச் செயற்;பட்டு வருகிறார். அமேசனில் வாழும் பழங்குடியின பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால் வைரஸ் காடுகளில் வாழும் மற்றவர்களுக்கும் பரவும் அச்சம் நிலவி வருகிறது.

இதற்கிடையே வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட பெண் அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும், அமேசனில் கொரோனா வைரஸ் பரவியது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link