சீனாவின் யாங்சே ஆறு பெருக்கெடுப்பு ஒரு இலட்சம் மக்களை வெளியேறுமாறு உத்தரவு
Share
சீனாவின் யாங்சே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இந்த வெள்ளம் 1,200 ஆண்டுகள் பழைமையான உலக பாரம்பரிய தளத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆற்று வெள்ளம் காரணமாக தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான 71 மீற்றர் லொஷன் ஜெயண்ட் புத்தர் சிலையை பாதுகாக்க ஊழியர் கள், பொலிஸார் மற்றும் தன் னார்வலர்கள் மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஏனெனில் 1949 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக வெள்ள நீர் புத்தர்சிலை யின் கால் விரல்கள் அளவுக்கு உயர்ந்துள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லொஷன் ஜெயண்ட் புத்தர் சிலை என்பது மைத்ரேய புத்தரைச் சித்திரிக்கும் வண்ணம் தாங் அரசமரபு காலத்தில் 713 மற்றும் 803 ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட ஒரு உயரமான கற்சிலையாகும்.
இது சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தெற்குப் பகுதியில், லெஷன் நகரத்திற்கு அருகில், மின்ஜியாங், சிங்யீ மற்றும் தாது ஆறுகள் கூடுமிடத்தில், லிங்யுன் மலையிலுள்ள சுண்ணாம்பு காலச் செம்மண் படிம மணற் கற்களின் முகப்புப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது.