Type to search

Local News

யாழ். போதனாவில் நோயாளர்களை பார்வை யிட வருவோருக்கு இறுக்கமான கட்டுப்பாடு

Share

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவ தற்காக பாஸ் நடைமுறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் நிலையில் நோயாளர்களை பார்வையிட வருவோர் அதனை பின்பற்றுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் பாஸ் இல்லாமல் நோயாளர்களைப் பார்வையிட வந்தோர் வைத்தியசா லைக்கு வெளியில் பல மணிநேரம் கால்கடுக்க காத்து நின்ற சம்பவம் நேற்று முன்தினம் ஞாயி ற்றுக்கிழமை இடம்பெற் றுள்ளது. இது தொடர்பாக நோயாளரை பார்க்க வந் தவர்கள் கருத்து தெரிவிக்கையில் முன்பு நோயாளர்களை பார்வையிட பாஸ் வைத்திருப்போரை அனுமதித்த பின்னர் பாஸ் இல்லாதவர்களையும் குறி ப்பிடப்பட்ட நேரத்திற்கு பின்னர் அனுமதிக்கும் வழமை காணப்பட்டது.

தற்போது அந்த நடை முறையில்லை என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். தூர இட ங்களிலிருந்து நோயா ளர்களை பார்க்க வருபவர்கள் நோயாளருடன் தங்கியிருந்த உறவினர் வீடு சென்றதால் தம்மால் உரிய அனுமதி அட்டையை (பாஸ்) பெற முடியாமல் போய் விட்டது எனவும் இதேவேளை தூர இடங்களில் இருந்து வரும் தங் களை பாதுகாப்பு கடமை யில் உள்ள சில ஊழியர்கள் மரியாதை இன்றி தரக்குறைவாக பேசுவதா கவும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர் பில் வைத்தியசாலை பணிப்பாளர் கருத்து தெரிவிக்கும்போது கொரோனா சூழ்நிலை காரணமாக நோயாளர்களைப் பார் வையிடுவோரை மட் டுப்படுத்துவதற்காக பாஸ் நடைமுறை இறுக்கமாக பார்க்கப்படுவதாகவும் இதற்கு நோயாளர்களை பார் வையிட வருவோர் ஒத் துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link