Type to search

Local News

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பணியில் இந்தியா தொடர்ந்து பங்களிக்கும்

Share

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு மிடையில் நேற்று மாலை சந்திப்பு இடம் பெற்றது.

இந்த சந்திப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று (நேற்று) மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை சந்தித்து தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பில் விசேடமாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் பின்னரான தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போது மீண்டும் பாராளுமன்றத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என வலியுறுத்தினார்.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந் திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link