Type to search

Local News

சங்கீத பரீட்சை பிற்போடப்பட்டது

Share

வட இலங்கைச் சங்கீத சபையினால் நடத்தப்படுகின்ற சகல பரீட்சைகள் மற்றும் கருத்தரங்குள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,

வட இலங்கைச் சங்கீத சபையினால் 2020 மே, யூன் மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சகல தரங்களுக்குமான சகல பரீட்சைகளும் தரம் 5 மற்றும் தரம் 6 பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்கென எதிர்வரும் 17,18,19 ஆகிய மூன்று தினங்களிலும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த கருத்தரங்குகளும் பிற்போடப்படு கின்றன.

பாடசாலைகள் செயற்படத் தொடங்கியதும் அத்திகதியிலிருந்து இரண்டு மாதங்கள் முடி வடையும் வகையில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link