கொரோனாவை தடுக்க களிம்பு கண்டுபிடிப்பு
Share
உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற் கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று, கொரோனாவை தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கி உள்ளது.
இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அதன்பேரில் இந்த களிம்பு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்தக் களிம்பை (மூக்கில்) தடவிக்கொண்ட 30 வினாடிகளுக்கு பிறகு எந்த வைரஸ் தொற்றும் கண்டறியப்படவில்லை என பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த களிம்பு ‘டி3 எக்ஸ்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.