கூட்டமைப்பின் பேச்சாளரை மாற்ற கொள்கையளவில் சம்பந்தன் இணக்கம் தெரிவிப்பு
Share
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பேச்சாளரை மாற்றுவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் நேற்று சந்தித்து கலந்துரை யாடியபோது, இந்த முடிவிற்கு வந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் உத்தியோகப்பூர்வமற்ற விதத்தில் நேற்றிரவு சந்தித்து பேசினர்.
கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூட்டமென்றுதான் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது.
எனினும், பல எம்.பிக்கள் பாராளுமன்ற அமர்வை தொடர்ந்து ஊர் திரும்பியிருந்ததால், போதிய எம்.பிக்கள் வந்து சேரவில்லை. இதையடுத்து கூட்டமைப் பின் தலைவர்கள் மட்டும் கலந்துரையாடினர்.
இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கல நாதன், கோவிந்தன் கருணாகரம், த.சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்த பேச்சில் கலந்து கொண்டனர்.
இதன்போது, கூட்டமைப்பின் அண்மைக்கால சறுக்கல்கள் மற்றும் மாற்று நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
இதன்போது, கூட்டமைப்பின் பேச்சாளரை மாற்ற வேண்டிய தேவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்போது, யாரும் எதிர்பாராத விதமாக, “பேச்சாளரை உடனே மாற்றலாம்” என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.