Type to search

Local News

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Share

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட நான்கு மாத காலத்திற்கான இடைக்கால கணக்கறிக் கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான இரு நாள் பாராளுமன்ற விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

2021ஆம் ஆண்டுக்கான புதிய வரவு – செலவுத் திட்டம் உருவாக்கப்படவுள்ளமை யினால் மூன்றாம் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையினை உருவாக்க அமைச்சரவை கன்னிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான நடவடிக்கை கடந்த ஒருவார காலமாக முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய எதிர்வரும் நான்கு மாத காலத்திற்கு தேவையான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மூன்றாம் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையின் முழுச் செலவினம் 1747.68 பில்லியன் நிதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள், உள்ராட்சி மன்ற அமைச்சுக்கு 194.38 பில்லியன் நிதி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அமைச்சுக்களை காட்டிலும் அரச சேவைகள் அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, பாதுகாப்பு அமைச்சுக்கு 174.09 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ள அரமுறைக்கடன்களை செலுத்த 778.39 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இடைக்கால கணக்கறிக்கைக்கு ஒதுக்கியுள்ள நிதியை திரட்டிக் கொள்ள 1300 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள இடைக்கால கணக்கறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான இருநாள் விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறும்.

நாளை 28ம் திகதி இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டோ அல்லது வாக்கெடுப்பு இன்றியோ நிறைவேற்றிக் கொள்ளப்படும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link