சிறப்பாக நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை
Share
கொரோனாத் தொற்று அச்ச நிலைமையிலும் சுகாதார நடைமுறைகளைப் பினபற்றி நேற்றைய புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பரீட்சை நிலையங்களிலும் 99 வீதமான வருகை காணப்பட்டதாகவும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சை வினாத்தாள் இலகுவாக இருந்ததாக கருத்து தெரிவித்தார்கள்.
அத்தோடு பெற் றோர்கள் குறித்த இக்கட்டான சூழ்நிலையிலும் பரீட்சையை நடத்தியதனால் அரசிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 8,410 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியிருந்தனர்.
யாழ்.மாவட்டத்தில் 2020 புலமைப் பரிசில் பரீட்சையில் தீவகம், யாழ்ப் பாணம், தென்மராட்சி வலயத்திலுள்ள 3,540 மாணவர்களும் வடமராட்சி, வலி காமம் வலயத்தில் 4,870 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றினர்.
94 பரீட்சை நிலையங்களில் 22 இணைப்பு நிலையங்களின் கீழ் பரீட்சைகள் ஆரம்பமாகி இடம்பெற்றது.
சுகாதார நடைமுறைக்கு அமைவாக பரீட்சை மண்டபங்கள் தயார்ப்படுத்தப்பட்டிருந்ததுடன் மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளி பேணி முகக் கவசம் அணிந்து பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண கல்வி அமைச்சு மேற்கொண்டது.