Type to search

Headlines

நாம் தொலைத்துவிட்ட அமைதியும் ஆரோக்கியமும் நிறைந்த உலகம் உருவாக…

Share

உலக சுகாதார ஸ்தாபனத் தின் கணிப்பீட்டின் மூலம் மனிதர் களுக்கு ஏற்படும் நோய்களில் 25 சதவீதமான நோய்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமா கவோ சுற்றாடல் மாசடைவதனால் ஏற்படுகின்றது என்பது அறியப்பட்டி ருக்கின்றது. சுற்றாடல் மாசடை வதற்குத் தேவையற்ற சத்தங்கள் ஒரு முக்கிய காரணியாக அமை கின்றது.

எமது பிரதேசங்களில் சூழல் மாசடைவதற்குக் காரணமாக இருக்கும் பிரதான சத்தங்களாக வாகன இரைச்சல், வாகனங்களில் இருந்து ஏற்படுத்தப்படும் கோன் ஒலி, வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகளில் இருந்து வெளிவரும் சத்தங்கள், வீட்டு உபகரணங்கள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றி னால் ஏற்படும் சத்தங்கள், ஒலி பெருக்கிகளினால் ஏற்படுத்தப்படும் சத்தம், இயந்திரங்களின் சத்தம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இவ்வாறான சத்தங்களினால் எமது சுற்றாடலில் அமைதித் தன்மை குலையும் பொழுது இது மனிதர்க ளில் பல்வேறுபட்ட தாக் கங்களை ஏற்படுத்துகின்றது.

இத்தாக்கங்களினால் ஏற்படும் விளைவுகளில் முக்கியமானவை யாக மன அழுத்தம், மனச்சோர்வு, ஞாபகமறதி, நித்திரைக்குழப்பம், உயர் குருதி அமுக்கம், இருதய நோய்கள், மாரடைப்பு, கேட்கும் திறன் குறைவடைதல், கல்விகற்றல் திறன் குறைவடைதல், இலகுவில் நோய் வாய்ப்படுதல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.


தெருக்களிலே எமது வாகனங்க ளில் இருந்து எழுப்பப்படும் கோன் ஒலிகளில் 95 சதவீதமானவை அநாவ சியமாக எழுப்பப்படுகின்றன. நல்ல முறையில் வாகனத்தைக் கட்டுப்படுத்தும் திறனும், மன அமை தியும், சுயநலமற்ற மனப்பாங்கும் இருந் தால் நாம் தேவையற்ற கோன் களை தவிர்த்துக் கொள்ளலாம். எமது கோபத்தையும், மனப்பதற்; றத்தையும், அவசரத் தன்மையை யும் வெளிக் காட்ட சிலசமயம் கோன் அடித்தபடியே செல்கின்றோம். ஒவ் வொரு தடவையும் கோனில் கைவைக்க முன்பு எமது மனதில் கைவைத்துப் பார்ப்போம். நிச்சயமாக எம்மால் அநாவசிய கோன்களைத் தவிர்த்துக் கொள்ளமுடியும்.

எமது வாகனங்களின் சைலென் சர்களை நல்ல முறையில் பேணு வோம். இதன்மூலம் வாகன இரைச் சல்களைக் குறைக்கமுடியும். ஒவ் வொரு மனிதனும் தெருக்களிலே பலமணி நேரங்களைச் செலவிடு கின்றான். பலமக்கள் தெருவோரம் குடியிருக்கிறார்கள். எனவே தெருக் களில் ஏற்படும் சத்தங்களைக் குறை ப்பதன் மூலம் மக்களிற்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைத்துக் கொள்ள முடியும். வீடுகளில் தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றின் சத்தங் களை இயலுமானவரை குறைத்து வைத்துக் கொள்வோம்.

தேவைய ற்ற நேரங்களில் அவற்றை நிறுத்தி விடலாம். வீட்டு உபகரணங்கள் உதாரணமாக கிறைண்டர், மோட் டர், மின் பிறப்பாக்கி போன்றவ ற்றைத் தெரிவு செய்யும் பொழுது அவற்றின் விலை, தராதரம் என்ப வற்றைக் கருத்தில் கொள்வது போன்று அவை போடும் சத்தத்தி னையும் கருத்தில் எடுத்து குறைந்த சத்தத்துடன் இயங்கும் உபகரணங் களைத் தெரிவு செய்து கொள்வோம். மின்விசிறிகள் இயங்கும் பொழுது அவற்றிலிருந்து சத்தம் வெளிப்படின் அவற்றை நல்லமுறையில் திருத்திக் கொள்வோம். வணக்கஸ்தலங்க ளிலும், பொது இடங்களிலும் அநாவசியமாக ஒலி பெருக்கிகளை இயங்கவைப்பதன் மூலமும் அச்சுற்றாடல் மாசுபட்டு மக்களுக்கு தாக்கங்கள் ஏற்பட்டுவ ருகின்றன. மக்களை நோயாளிக ளாக்கும் எந்த நடவடிக்கைகளை யும் இறைவன் விரும்பமாட்டான் என்பதை மனதில் நிறுத்துவோம்..

சிறு பிரச்சினைகளுக்கும் சத்தம் போட்டுப் பேசுவதைத் தவிர்த்துக் கொள்வோம். தன்வலிமையால் மற்றவனை அடக்குபவன் உண் மையான பலசாலி அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே உண்மை யான பலசாலி ஆவான்.

இனிய இசை கேட்டல், நம்பி க்கை தரும் நூல்களை வாசித்தல், சற்றுநேரம் வெளியே உலாவி வருதல், சம வயதுடைய நண்பர்க ளுடன் அளவளாவுதல், குடும்பத்தா ருடன் மனம் விட்டுப் பேசுதல், குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடல் இவையாவும் பதற்ற த்தைக் குறைக்க உதவும். அமைதி ஆரோக்கியம் தரும்.

அன்று இயற்கையோடு ஒன்றி இனிமையாய்,அமைதியாய் இரு ந்த எமது சுற்றாடல் பல்வேறுபட்ட தேவையற்ற சத்தங்களினால் குழப் பம் அடைந்து, மாசுபட்டு, மனிதர் களை நோயாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது.

இத் தாக்கங்களில் இருந்து எம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். மாற்றம் என்பதை தவிர எல்லாமே மாறக் கூடியது நாம் மனது வைத்தால். நாம் தொலை த்து விட்ட அமைதியும் ஆரோக்கியமும் நிறைந்த உலகம் உருவாகும் என நம்புவோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link