எமது பாரம்பரிய நடைமுறைகள் மெருகேற்றப்பட…..
Share
எமது கலாசாரங்களும் பண் பாடுகளும் காலத்திற்கு காலம் மெருகேற்றப்பட்டு மேலைத்தேய நாடுகளால் கூட மதிக்கப்படுகின்ற ஒரு உன்னத நிலையில் ,ருந்து கொண்டிருக்கிறது. இது மனித னின் உடல், உள ஆரோக்கி யத்திற்குக் கூட உறுதுணையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இருந்த பொழுதும் எமது சில பாரம்பரிய நடைமுறைகள் எமது மக்களின் மனநிலையிலும் உள ஆரோக்கியத்திலும் பாரதூரமான தீயதாக்கங்களை ஏற்படுத்தியி ருப்பதுடன் பெண்களின் சமத் துவ உரிமைகளையும் பாதித்து நிற்கின்றது.
உதாரணமாக ஒருவரின் மர ணச்சடங்கின் பொழுது பாரிய மன வேதனையில் இருக்கும் அவரின் மனைவியை அவரின் உடலை சுற்றிவரச் செய்து தாலிக் கொடியை கழற்றி போடச் சொல் லும் ஒரு சம்பிரதாயமும் பொட்டு, பூ என்பவற்றை அகற்றச் சொல்லும் ஒரு சம்பிரதாயமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது வேதனையில் துவண்டி ருக்கும் அந்தப் பெண்ணுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் பெரும் மனத்தாக்கங்களை ஏற் படுத்தி வருகின்றது. மனைவியின் இழப்பின் பொழுது கணவன் அனுபவிக்காத பல ,டர்பாடுகளை கணவனின் இழப்பின் பொழுது மனைவி எதிர்கொள்ளும் ஒரு துர்ப்பாக்கிய நிலை இருந்து வரு கிறது. ஒரு மனிதனின் ,றப்பின் பொழுது அந்த துயரத்திலிருந்து அந்தக் குடும்பத்தினர் மீள்வதற் கான சில புதிய பாரம்பரிய முறை களை நாம் மெருகேற்றிக் கொள்ள முடியும். ஆனால் மரணச் சடங் கின் பொழுது பெருந்து யருற்றி ருக்கும் மனைவியை தாலியை கழற்றி ,றந்தவரின் உடல் மீது போடுமாறு கேட்டுக் கொள்வதோ அல்லது அங்கே வைத்து பூவையோ பொட்டையோ அகற்றுமாறு கேட் டுக் கொள்வதோ மனிதத்துவப் பண்பு ஆகாது. இது பல உளவி யல் தாக்கங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.
சமய, சமூக பெரியவர்கள் எமதுஇந்த நடைமுறைகளை தவிர்த்துக் கொள்வதற்கு தமது பெரும்பங்களிப்பை ஆற்ற முடி யும். காலத்திற்கு ஏற்றாற் போல் எமது பாரம்பரிய நடைமுறைகள் மெருகேற்றப்படுவது அன்று தொட்டு நடைபெற்று வருகிறது. எனவே இவ்வாறான நடைமுறை மாற் றங்கள் ஒரு தவறான காரியம் என்று கொள்ளப்பட மாட்டாது.
Dr.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்