Type to search

Headlines

யாழ்ப்பாணத்தை உலுக்கும் உண்ணிக்காய்ச்சல்(Scrub Typhus)

Share

மாரி காலத்தைத் தொடர் ந்து பல தொற்று நோய்கள் யாழ்ப் பாணத்தில் பரவி வருகின்றன. டெங்குக் காய்ச்சல், எலிக்காய்ச் சல், உண்ணிக்காய்ச்சல் என்பன அவற்றில் முக்கியமானவை. இன்று நாங்கள்Scrub Typhus எனப்படும் உண்ணிக்காய்ச் ;சலைப் பற்றிப் பார்ப்போம்.

கடந்த ஆண்டு யாழ்.போதனா மருத்துவமனையில் மட்டும் சுமார் 274 பேர் உண்ணிக் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட் டார்கள். இந்த ஆண்டு ஆரம்பத்தி லிருந்து இன்று வரை சுமார் 30 பேர் இந் நோயுடன் அனுமதி க்கப்பட்டுள்ளார்கள்.

மாரிகாலத்தி லேயே இந்த நோய் அதிகமாகப் பரவுகின்றது. இது யாழ்ப்பாணத்தில் பரவலாகக் காணப் பட்ட போதிலும் கோப் பாய், அச்சுவேலி, புத்தூர், இடை க்காடு போன்ற இடங்களில் அதிகம் காணப்படுகிறது.

இந்த உண்ணிக்காய்ச்சல்trombiculid mite என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சருகு உண்ணியின் குடம்பி (Larva) மனிதர்களை தற்செய லாகக் கடிப்பதனதால் பரப்பப்படு கின்றது. இதுorientia tsut sugamushiஎனப்படும் ஒரு வகை சிறய பக்றீரியாவினால் ஏற்படும் நோயாகும்.

சருகு உண்ணியின் நிறையு டலி தாவரப் பாகங்களை உண் கின்றன. உண்ணியின் குடம் பிகள் மழை காலத்தில் புற்களின் நுனியிலும் பற்றைகளின் இலை விளிம்புகளிலும் காணப்படுகின்றன.

இவை பொதுவாக எலிகள், ஆடு, மாடுகள், நாய்கள் போன்ற விலங்குகளையே கடித்து உறிஞ் சுகின்றன. மனிதர்களை அவை தற்செயலாகவே கடிக்கின்றன. இந்த உண்ணிகள் மிகவும் சிறி யவை. நிறையுடலி 1-2mm நீள மானது. குடம்பி 0.3 mmஅ நீளமா னது.
புற்களிலும் பற்றைகளிலும் காணப்படும் உண்ணிக் குடம்பி கள் மனிதர்கள் வெற்றுக்கைகள், கால்களுடன் வேலை செய்யும் போது அவை உடலில் ஏறி ஊர்ந்து செல்கின்றன.
அவ்வாறு ஊர்ந்து சென்று கமக் கட்டு, அரை, இனப் பெருக்க உறுப் புக்கள், பெண்களின் மார்பகங் களுக்கு அடிப்பகுதி போன்ற ஈரளிப் பான தோல் மடிப்புக்கள் உள்ள இடங்களில் கடிக்கின்றன. பெரும் பாலான சந்தர்ப்பங்களில் நோ, அரிப்பு என்பன ஏற்படுவ தில்லை. சிலவேளைகளில் அரிப்பு ஏற்படலாம். எனவே உண்ணிக் குடம்பி கடித்ததை நாம் அறியமாட் டோம்.
கிருமித்தொற்றுள்ள உண் ணிக்குடம்பிகள் கடிக்கும் போது தான் எமக்கு உண்ணிக்காய்ச்சல் ஏற்படுகிறது. உண்ணிக் காய்ச் சலின் அறிகுறிகளாவன, கடுமை யான காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல் தசைகளில் நோ என்பனவாகும். இந்த அறிகுறிகள் டெங்குக் காய்ச்சல், எலிக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்றவற்றி லிலும் ஏற்படுவதனால் வேறுப டுத்தி அறிவது கடினமாகும்.

இந்த நோயை அறிவதற்கு உதவுவது உண்ணிக்குடம்பி கடித்த இடத்தில் ஏற்படும் கறுப்பு நிறத்தழும்பு ஆகும். இது eschar என ஆங்கிலத்தில் அழைக்கப்ப டுகின்றது. இது கமக்கட்டு, அரை போன்ற மறைவான பகுதிகளில் ஏற்படுகின்றது. (உண்ணி கடித்த இடத்தில்) இது அரிப்பு நோ என் பவற்றை ஏற்படுத்துவதில்லை.

எனவே காய்ச்சல் உள்ளவர்கள் தழும்பு உள்ளதா என அவதா னித்து உங்கள் மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள். இந்த eschar உண்ணிக்காய்ச்சல் ஏற்படும் 60% நோயாளிகளிலேயே ஏற்படு கின்றது.

கடுமையான உண்ணிக் காய்ச் சலில் நுரையீரல் அழற்சி, மூளை அழற்சி, இருதய அழற்சி, சிறுநீரக அழற்சி, இரைப்பையிலிருந்து குறிதிப் பெருக்கு போன்ற அபாய கரமான நிலைகளை ஏற்படுத் தும்.
உண்ணிக்காய்ச்சல் ஒரு அபா யகரமான நோயாக இருந்த போதி லும் இதற்குச் சிறப்பான சிகிச் சையுள்ளது. doxy cyclin எனப் படும் மருந்து இந்நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்குப் பயன் படுத்தப்படுகின்றது. இந்த மரு ந்தை 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் கர்ப்பிணி மற் றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் பயன்படுத்தக்கூடாது. இதற்குப் பதிலாக இவர்களுக்கு azithromycinஎனும் மருந்தைப் பயன் படுத்தலாம். இந்த நோயைக்கட் டுப்படுத்த தடுப்பூசி இல்லை. ஆனால் doxy cyclin களை ஒரு கிழமைக்கு ஒரு தடவை எடுப்பதன் மூலம் வராமல் தடுக்க லாம்.

இது தவிர முழு நீளக் காற் சட்டை, நீளக்கை சேட், பூட்ஸ் என்பவற்றை பற்றைகளிலும் புற்தரைகளிலும் வேலை செய்யும் போது பயன்படுத்தலாம். உண் ணிகளை விரட்டும் பூச்சுக்களை உடலில் தெரியும் பாகங்களில் பூசுவதன் மூலமும் பாதுகாத்துக் கொள்ளலாம். permethrin,citronella oil போன்றவை உதாரணங்களாகும்.

யாழ்ப்பாணத்தில் பரவலாகக் காணப்படும் உண்ணிக் காய்ச் சல் ஒரு அபாயகரமான நோயா கும். இது பற்றிய அறிவு நம் மத் தியில் குறைவாகக் காணப்ப டுïடூகின்றது. எனவே இது பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியல் ஏற்பட வேண்டும்.

DR.S.கேதீஸ்வரன்
MBBS,MD,FCCP(cey)FACP (USA)
Fellowship in Diabetes mellitns
பொது மருத்துவ நிபுணர்
யாழ்.போதனா மருத்துவமனை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link