Type to search

Headlines

நாளாந்தம் அதிகரிக்கும் தொற்றாளர்கள் யாழில் மேலும் 3 இடங்களில் கொரோனா சிகிச்சை நிலையங்கள்

Share

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம், நாவற்குழியில் அமைந்துள்ள அரச களஞ்சியக் கட்டடம் என்பவற்றை கோவிட்-19 சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


அத்துடன், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள வசாவிளானில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலும் கோவிட்-19 சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.


நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது.


இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நாவற்குழி அரச களஞ்சிய கட்டடத்தில் 300 நோயாளர் படுக்கைகள் கொண்ட சிகிச்சை நிலையம் அமைக்கப்படவுள்ளது.


வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் வசாவிளான் கட்டடத்தில் இடவசதிக்கு அமைவாக நோயாளர் படுக்கைகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link