கணவனின் விபரீத முடிவையடுத்து மனைவியும் உயிர் துறப்பு
Share
விபரீத முடிவெடுத்து கணவன் உயிரைமாய்த்தமையை அறிந்த மனைவியும் அதே வழி யில் தனது உயிரைத் துறந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைத் தொழிலக பட்டறையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது-34), அவரது மனைவி பகீரதன் ரஜிதா (வயது-33) ஆகிய இருவருமே உயிரை மாய்த்தனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக குடும்பத் தலைவர் நேற்று முன்தினம் மாலை நகை வேலைக்கு பயன்படுத்தும் இரசாயனத்தை உட்கொண்டுள்ளார்.
அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
அதனை அறிந்த மனைவியும் அதே இரசாயனத்தை உட்கொண்டுள்ளார். அதனால் அவரது உயிரும் பிரிந்தது.
இறப்பு தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.