இன்று இரவு முதல் 3 நாட்களுக்கு நாடு முழுவதும் மீண்டும் முடக்கப்படுகின்றது
Share
நாடு முழுவதும் இன்று இரவு 11 மணிக்கு அமுலாகவுள்ள பூரண பயணத் தடையின்போது கட்டுப்பாடுகள் மிக இறுக்கமாக பின்பற்றப்படும் என இராணுவத் தள பதியும் கோவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரி வித்துள்ளார்.
மேலும் அதனை மீறுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,
இன்று இரவு 11 மணி தொடக்கம் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு மிக இறுக்கமாக நடைமுறையில் இருக்கும். அ
தனையடுத்து 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு போக்கு வரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என தெரிவித்திருக்கும் இராணுவத் தளபதி, தொடர்ந்து 25 ஆம் திகதி இரவு 11 மணிக்கு மீண்டும் நாடளா விய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல் படுத்தப்பட்டு 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.
இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடை முறையிலிருக்கும் போது அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு சுகயீனம் அல்லது மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட விடயங்கள் தவிர வேறு எந்தவொரு காரணிகளுக்காகவும் யாரும் அநாவசியமாக நடமாடுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் அன்றைய தினம் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமையவே வெளியில் செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் தொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரம், நீர், மின்சாரம், தொடர்பாடல், ஊடகம், துறைமுகம், விமான நிலையம், தனியார் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரிபவர்கள், பணிக்குச் செல்ல முடியும்.
அதனை உறுதிப்படுத்துவதற்காக தொழில் அடையாள அட்டை அல்லது ஆவணம் அவர்கள் வசமிருக்க வேண்டும்.