Type to search

Headlines

9ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

Share

9ஆவது பாராளுமன்றத் தின் கன்னி அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை யில் இன்று ஆரம்பமாகும்.

புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தை இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைப்பார்.

அரசியலமைப்பின் பிரிவு 33 (2) இல் உள்ள விதிகளின்படி அரசின் கொள்கை அறிவிப்பை வெளியிட்டு ஜனாதிபதி உரையாற்றுவார்.

கன்னி பாராளுமன்ற அமர்வுக்கு வருகை தரும் ஜனாதிபதியை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புதிய சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க ஆகியோரால் பாராளுமன்றக் கட்டடத்தின் பிரதான வாயில் படிக்கட்டுகளில் ஜனாதிபதி வரவேற்கப்படுவார்.

இருப்பினும், இன்றைய பதவியேற் பின்போது துப்பாக்கி வேட்டுக்கள் அல்லது வாகன அணிவகுப்புகள் இருக்காது.

பாராளுமன்ற சம்பிரதாய அமர்விற்கு முன்னதாக, காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தின் திறப்பு விழா சடங்கு காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

நாளை காலை முதல் அமர்வின் போது, நிலையியல் கட்டளையின் இலக்கம் 1 இன்படி, புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார்.

பின்னர், புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகர் முன் உறுதிமொழியை எடுப்பார்கள்.

பாராளுமன்ற நிலையியல் கட்டளையின்படி, தெரிவான உறுப்பினர் ஒருவர் அதிகாரப்பூர்வ மொழிகளான தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதாவதொரு மொழியில் சத்தியப்பிரமாணம் செய்யலாம்.

புதிய பாராளு மன்றத்தில் பொதுஜன பெரமுன 145 இடங்களைப் பெற்றது. 54 ஆசனங் களை பெற்ற ஐக் கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாக செயற்படும்.

அமைச்சர் தினேஷ் குணவர்தன சபை முதல்வராகவும், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆளுங் கட்சி பிரதம கொறடாவாவும் செயற்படுவர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link