Type to search

Headlines

யாழில் சுவிஸ் போதகரின் ஆராதனை

Share

யாழில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையுடன் தொடர்புபட்ட 800 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேவாலய ஆரதனையொன்றில் சுவிஸ் போதகர் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

குறித்த ஆராதனையில் போதகர் உட்பட 9 பேரும் கலந்துகொண்டிருந்தமையின் பிரகாரமே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

மேற்படி 9 பேருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் போதகர் டிக்கோயாவில் நடத்தியுள்ள ஆராதனையில்;; கலந்துகொண்டுள்ள 65 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அபாயகரமான வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொழும்பில் இருந்து வருகைதந்த 135 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த 200 குடும்பங்களிலும் மொத்தமாக 800 பேர் உள்ளனர்.
இவர்கள் தனிமைப்படுத்தும் விதிகளை மீறும் பட்சத்தில் இத்தோட்டத்திற்கு சீல் வைக்க நேரிடும் என அம்பகமுவ பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி கிசான் பிரேமசிறி தெரிவித்தார்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப் படுவதனால் தோட்ட நிர்வாகம் இதற்கு பூரண ஒத்துழைப்பினை தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த வாரங்களில் கொழும்பு மற்றும் அபாயகரமான வலயமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ள இடங்களிலிருந்து வருகைதந்த சுமார் 846 பேர் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link