மீள் அறிவித்தல்வரை யாழ்.தொடர்ந்து முடக்கம் – பொது மக்கள் அதிகமாக கூடுவதே காரணம்
Share
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்க தீர்மா னிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போதைய நிலை யை கருத்தில் கொண்டுயாழ்ப்பாண மாவட்டத் தில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக் கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய மாவட்டங் களில் நேற்று காலை மாலை 6 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுலுக்கு வரும்.
பின்னர், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத் தப்படும் என கூறப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா நோய்க்கிருமி தொற்று பரவும் அதிக ஆபத்து நிறைந்த பகுதி களாக அடையாளம் காணப்பட் டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட் டங்களில் அமுலில் உள்ள ஊர டங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.
யாழ் மாவட்டத்தில் சனச் செறிவு அதிகமாகக் காணப்படு வதும், கடந்த ஊரடங்குச்சட்ட தளர் வின் போது மக்கள் அதிகமாக கூடியதும் அதேநேரத்திலே தற் போது கூட சில இடங்களில் பொது மக்கள் அதிகமாக கூடி வருவதும் இதற்கான காரணமாகும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரி வித்தார்.
மேலும் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒரே வழி தனி மைப்படுத்தலை தொடர்வது அதே நேரத்திலே சமூக இடைவெளியை பேணுவது என்பதன் அடிப்படையில் நிலைமையை கருத்தில் கொண்டு ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது என தீர்மானம் எட்டப் பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.