Type to search

Headlines

மாகாண மட்டத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து தீர்மானிக்கப்படும்

Share

மாகாண மட்டத்தில் கிடைக்கப் பெறும் சுகாதார பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மாகாண மட்டத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்­ தெரிவித்துள்ளார்.

தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாளாந்த பொருளாதார செயற் பாடுகளை உடனடியாக ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்புகளை கண்டறியும் நோக்குடன் மாகாண மட்டத்தில் தகவல்களை கேட்டறி வதற்கான சிறப்புச் சந்திப்பொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெற்றது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் அனைத்து மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்ட சுகாதார துறை அதிகாரிகள் தமது மாகாணங்களின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கினர்.

தற்போதைய நிலைமைகளை கருத்திற் கொண்டு கைத்தொழில் நிறுவனங்கள், விவசாய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னர் போன்று முன்னெடுப்பதற்கு தேவையான பணிப்புரைகளை சுகாதார பணிப்பாளரின் ஊடாக உடனடியாக முன் வைக்குமாறு ஜனாதிபதி, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாகாண மட்டத்தில் கிடைக்கப்பெறும் சுகாதார பரிந்துரைகளை கருத்திற் கொண்டு தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தீர்மானிக்கப்படும்.

நாளாந்த ஊதியம் பெறுவோரின் வாழ்வாதாரம் குறித்து சிறப்புக் கவனம் செலுத்துவதும் முக்கிய நோக்கமாகும்.

அந்தந்த மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் தற்போது செயற்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நாளாந்தம் இடம் பெறும் நோயாளிகளை கண்டறியும் பரிசோதனை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

நோய்த்தடுப்பு மத்திய நிலையங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் மேற் கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசு மேற்கொண்ட செயற்பாடுகள் மிகவும் பயனுறுதி வாய்ந்தவை என மாகாண சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சுகாதார துறையின் முன்னேற்றத் திற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகளை மீளாய்வு செய்வதற்கு இதனை சந்தர்ப்பமாக ஆக்கிக் கொள்ளுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்த்தன, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானியும் இராணுவத்தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link