பாடசாலைகள் மீண்டும் இன்று ஆரம்பம்
Share
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் தவிர, ஏனைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
200 இற்கு மேற்பட்ட மாணவர்களை கொண்ட 2ஆம் நிலை பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பாடசாலைக்கு அழைக்கப்படுவர்.
தரம் 5 மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்களிலும் பாடசாலை நடத்தப்படும். எனினும் கற்றல் செயற்பாடுகள் இடம் பெறும் நேரத்தில் எவ்வித மாற்றமும் ஏற் படாது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் போது சுகாதார வழிகாட்டுதல்களை அவசியமாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து அதிகாரிகளையும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் 11ம், 12ம் மற்றும் 13ம் தர மாணவர் களுக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கடந்த 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு வார காலம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.