நான்கு வாள்களுடன் ஒருவர் நேற்றுக் கைது
Share
பல வருடங்களுக்கு முன்பான வாள்கள் நான்குடன் 32 வயதுடைய ஒருவர் வடலியடைப்புப் பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட் டுள்ளார்.
சந்தேகநபர் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடம் மீட்கப்பட்ட 4 வாள்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கைது நடவடிக்கை நேற்றிரவு இடம்பெற்றது.
பல ஆண்டுகளுக்கு முன்பான 4 வாள்களை விற்பனை செய்வதற்கு சந்தேகநபர் முற்பட்டுள்ளார்.
இந்த முயற்சி யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தெரியவந்ததையடுத்து வாள்களை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் நேற்றிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை இளவாலைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


