Type to search

Headlines

ஞாயிறு, திங்கள் நாடு முழுவதும் ஊரடங்கு

Share

நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை மறுதினம் திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

மே 24, ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று 23, சனி இரவு 8.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் மே 26, செவ்வாய் அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும். இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணிவரை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் நடைமுறையில் இருக்கும் அதேநேரம் மே,26 செவ்வாய் முதல் முன்னர் போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஊரடங்குச்சட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. )

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link