Type to search

Headlines

கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க சிறப்புத் திட்டம்

Share

யாழ்ப்பாணம் உட்பட இடர்வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் கொரோனா அறிகுறிகள் எதுவுமின்றி மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களைக் கண்டுபிடிக்க, பொதுமக்களிடையே பரிசோதனைகளை முன்னெடுக்க சிறப்புச் செயற்றிட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் பொருட்டு இந்த பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று கொழும்பில் இடம் பெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப் பின்போது சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படு வதில் சிறிய வீழ்ச்சியை அவதானிக்க முடிகிறது.

நாம் பரிசோதனைகளை அதிகரித்துள்ள சந்தர்ப்பத்திலேயே அடையாளம் காணப் படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதன் ஊடாக நாட்டில் இருக்கும் கொரோனா தொற்றாளர்களில் எண்ணிக்கை குறைந் துள்ளதாகத் தெரிகிறது. எனினும் எமக்கு மற்றொரு சவால் உள்ளது.

அதுதான் எந்த நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாத கொரோனா வைரஸ் தொற் றாளர்கள் இருப்பின் அவர்களை நாம் அடையாளம் காண வேண்டும்.

இதனடிப்படையில் கொரோனா தொடர்பில் அதி அபாய வலயங்களாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி, களுத்துறை ஆகிய மாவட்டங்களும் இரத்தினபுரியில் இரண்டு பொலிஸ் பிரிவுகளுமான பகுதி களுக்குச் சென்று பொதுமக்களிடமிருந்து மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்ய வேண்டும்.

அப்போது உறுதியாக நாம் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோமா என்பதை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

உண்மையிலேயே நாம் கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால் அடுத்த வாரமாகும்போது, தொற் றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை மிகப் பெரியளவிலான வீழ்ச்சியைக் காண வேண்டும். அப்படியானால் மட்டுமே நாம் அன்றாட நடவடிக்கைக்கு மீளலாம்.

இந்தத் தொற்று, சமூகத்தின் மத்தியில் உள்ளதா என்பதை உறுதிசெய்ய , சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட் டுள்ளது.

இந்த நிலையிலேயே அதி அபாய வலயங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், யாழ்ப்பாணம், கண்டி மற்றும் இரத்தினபுரி யில் இரு பொலிஸ் பிரிவுகளில் பொதுமக்களின் மாதிரிகளைப் பெற்று பரிசோதிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எவ்வாறாயினும், தற்போதைய சூழலில், கொரோனா தொற்றாளர்கள் பதிவாவது குறைவடைந்திருந்தாலும், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை தற்போதுள்ள இறுக்கமான ஊரடங்கு நடைமுறைகளைப் பேண வேண்டும் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link