Type to search

Headlines

கொரோனாவால் பாதிக்கப்பட்டமக்களுக்கான அரசின் நிவாரணங்கள்

Share

கொரோனாவல் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக் கான நிவாரணங்கள் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் மற்றும் அவற்றை பெற்றுக் கொள்வதற்கு தகைமையுள்ளவர்கள் கீழ்வருமாறு,

1.முதியோருக்கான கொடுப்பனவு பெறும் 416764 பேருக்கும் முதியவர்களாக இனம் காணப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்டுள்ள 142 345 பேருக்கும் ரூபாய் 5000 கொடுப்பனவு வழங்கப்படும்.

2.அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு பெறும் 84071 பேருக்கும் அங்கவீனர்கள் என அடையாளம் காணப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுள்ள 35229 பேருக்கும் ரூபாய் 5000 கொடுப்பனவு உரித்தாகும்.

3.விவசாய காப்புறுதி முறைமையின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள 160675 விவசாயி களுக்கும் ரூபாய் 5000 கொடுப்பனவு உரித்தாகும்.

4.சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு பெறும் 25320 பேருக்கும் மேலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ள 13850 பேருக்கும் ரூபாய் 5000 கொடுப்பனவு வழங்கப்படும்.

5.கர்ப்பிணி தாய்மார் மற்றும் மந்த போசனையுடைய பிள்ளைகளுக்கான திரிபோஷ மற்றும் வேறு போசனை பொருட்கள் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும்.

6.சமுர்த்தி கொடுப்பனவு பெறும் 1798655 பேருக்கும் மேலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ள 600339 குடும்பங்களுக்கும் ரூபாய் 5000 கொடுப்பனவு சமூர்த்தி வங்கிகள், சமுர்த்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்படும்.

7.ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் 645179 பேருக்கு ஓய்வூதிய சம்பளம் வழங்கப்படும்.

8.1500000 அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படுவதுடன் சம் பளத்திலிருந்து கடன் தொகை அறவிடப்படுவது மீண்டும் அறிவிக்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

9.முச்சக்கரவண்டிகள், ட்ரக் வண்டிகள், பாடசாலை பஸ் மற்றும் வான்கள் மற்றும் சுயதொழிலுக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் உரிமையாளர்கள் உள்ளிட்ட சுயதொழில்களில் ஈடுபட்டுள்ள 1500000 பேருக்கு வரி தவணைக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

10.உருவாகியுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் பொருளாதார அசௌகரியங்கள் காரணமாக ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத தனியார் வர்த்தகங்களுக்கும் நிவாரணங்கள் உரித்தாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link