கைது செய்யச் சென்ற 38 பொலிஸ் தனிமைப்படுத்தலில்
Share
சந்தேகநபர்களை கைது செய்ய சென்றமையால், கொரோனா அச்சத்தில் ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒரு குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட 38 பொலிஸார் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜா-எல, பமுனுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, கெக்கிராவ பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 38 பேரே இவ்வாறு தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பலாத்காரமாக தனியார் இடமொன்றுக்குள் அத்து மீறியமை தொடர்பில் பமுனுகம – தெலபுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதன் காரணமாக பமுனுகம பொலிஸ் உத்தி யோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சுகவீனமடைந்ததன் காரண மாக றாகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்தே பமுனுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் குற்ற வியல் பிரிவிலுள்ள 8 பேர் உட்பட 38 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.