கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைதாகி விடுதலை
Share
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகைத் தீபம் ஏற்றிய மாணவன் கோப்பாய் பொலிஸா ரால் கைது செய்யப்பட்ட நிலையில் பிணை யில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு நேற்றிரவு 7.45 மணியளவில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் செல் லும் வாயில்கள் மூடப்பட்டதால் பரமேஸ் வரன் ஆலயத்தில் தீபம் ஏற்ற முடியாத நிலையில் மாணவர்கள் இவ்வாறு பண் பாட்டு வாயிலின் வெளியே தீபங்களை ஏற்ற முற்பட்டனர். அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.
எனினும் மாணவர்கள் தங்கியிருக் கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.
தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.