ஆசிரியர் நியமனம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை
Share

அடுத்த சில மாதங்களில் மேலும் 15 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர்களாக தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ளனர்.
கோவிட் – 19 நிலைமை மற்றும் பொதுத் தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களில் இந்த ஆசிரியர்களை நியமிக்கும் திட்டம் தாமதமானது என்று கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
க.பொ.த. சாதாரணதரத்தில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களும் க.பொ.த உயர்தரத்துக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்த விபரங்களை வழங்குமாறு கல்வி அமைச்சு ஏற்கெனவே பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்திருந்தது.
அதன்படி குறிப்பிட்ட ஆசிரியர்கள் மாகாண பாடசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.